Published on August 24, 2026
Onam Special- 2026

சேவல்
எங்க வீட்டு கோழிக்கூட்டில்
முட்டைப் போடும் பெட்டைக்கோழிக்கு
சேவல்கோழி
ஏழுமுறை இடம் பார்க்கும்.
முட்டையிட சரியான இடம்பார்த்து
அதில் அமர்ந்து பொட்டை கோழிக்குக் காட்டும்.
அதன் பிறகு பொட்டைக்கோழி வந்து
முட்டையிடும் கூட்டிற்கு வெளியே
நிற்கும் சேவல்கோழி கொக்கரகோவென
சத்தம் போடும்.
அந்த வீட்டின் ஓரத்தில் குழந்தைப் பெற்ற
பொண்ணொருத்தி பால்குடி மாறா
குழந்தையோடு ஏமாற்றிவிட்டு போன
கணவனை வாயில வந்த வார்த்தையெல்லாம்
சொல்லிச் சொல்லி
திட்டிக்கொண்டிருந்தாள்…
രണ്ടാം ഓണപ്പതിപ്പ് പുസ്തകരൂപത്തിൽ വായിക്കാം
Trending Now
Showing Slide 1 of 8: രാജന് സി എച്ച് എഴുതിയ ചായക്കട ചെറുക്കവിതകള്








