AI illustration by Surya for the Tamil poem Kallangal by Soumya

கள்ளன்கள்

நே​ற்றைய பௌர்ணமி இரவு
நடுநிசியில்
வீட்டு தட்டுப்பலகையில்
யாரோ நடப்பதாய் சப்தம்

​பழைய மண்வீட்டின் சின்ன
இடுமுடுக்கில் எப்படி ஒருவன்
நுழைந்தான்?

​ஓட்டை மிதிச்சாதான்
உடைஞ்சிடுமே?

​குரங்கு விரட்ட வாங்கிய
நாட்டுத் துப்பாக்கியை
வச்சுக்கலாமா?

​வெட்டுக்கத்தியை
வைத்துக்கொள்ளலாமா?

​படுக்கை அறையில் விடிய
விடிய லைட்டை அணைக்காமல்
இருக்கலாமா?

​யாரோப் பேசுவது போல
பக்கத்தில் திருடன் வந்தது
போல இப்படி எண்ணம் விடிய
விடிய பதைபதைப்போடு
தூங்கவில்லை.

​காலையில் அப்பா எழுப்ப
ஒரு பக்கம் துப்பாக்கி.
மறுபக்கம் வெட்டுக்கத்தி.
​இப்படி ஒவ்வொரு நாளும்
வீட்டிற்குள்ளும்
வீட்டிற்கு வெளியேயும்
கள்வர்களைப் பார்த்தும்
பார்க்காமலும் வாழ்க்கை.
​ரயில் நிலையங்களில்
பஸ் நிலையங்களில்
கல்லூரி வாசல்களில்
சிரித்துப் பேசும் சுற்றங்களில்
நெருங்கிய நட்புகளில்
ஓராயிரம் கள்ளன்கள்…

Join with us

Read Also  மௌனம்/ கவிதை / தமிழச்சி தங்கப்பாண்டியன்