AI illustration by Surya for the Tamil poem Rubber Kadu by Soumya

ரப்பர் காடு

லைந்து திரியும்
அரணைகளும் பாம்புகளும்
பல்லிகளுமாய்.
ஜெயந்தியும், சதீஷும் ராஜனும் நானும்
விளையாடச் செல்லும்
ரப்பர் காட்டில்.

அரணையைக் குறிப்பார்த்துச் கொல்லும் சதீஷ்
ஒடிந்த ஓட்டுத்துண்டில் சவ ஊர்வலம்
பத்து இருபது பைசா நாணயங்களைப்
போட்டு ஓலையில் சிலுவை செய்து
ஒப்பாரி.

எங்களுக்குள் சண்டை வந்தால்
முருக்குமுள் காயெடுத்து
பாறையில் உரசி சூடு வைப்போம்.

கண்ணாமூச்சி விளையாடுகையில்
மாட்டுத் தொழுவம், கிணற்றடி,
கருங்கல் கூட்டமென
மறைந்து கொண்டிருக்கையில்
பப்பாளி மரத்தின் பழத்தைக்
கையால் கீறி சாப்பிட்டு விட்டு
சதீஷ் தோலை மறுபக்கம் எறிய
ஜெயந்தி பாம்பென்று அலறி
அழுதது இன்னும் நினைவில்.

செல்ல மகள் சௌபர்ணிகா
செல்போனில் விளையாடிக்
கொண்டிருக்கிறாள் தனிமையில்
இப்போதெல்லாம்

Join with us

Read Also  உணர்தல்/ கவிதை / தமிழச்சி தங்கப்பாண்டியன்