Published on June 5, 2026

நீராழி
பள்ளிப் பருவத்தில்
அரசமரத்தடி பிள்ளையார் கோவிலை
தொட்டடுத்த குளத்தில்
முங்கி குளித்து, ஈரத்துணியோடு
நீராழியில் கால் நனைத்தபடியே
சுற்றி கிடக்கும் செம்பருத்திப்பூவை
பறித்துக் கொண்டு சாமி கும்பிட்ட பால்யம்.
அரச மரத்தையொட்டி மாமரத்து
பழுத்த பழங்களெல்லாம்
ருசித்த மாம்பழ காலம்
இடதுகண் இமை மூடியை உருவி
மாமரத்தில் ஒட்டியவுடன்
அழகான காற்று வீச
கையில் விழும் மாம்பழங்கள்.
மனசுக்குள் மழைபொழியும் கார்காலமாய்.
இப்போது திருமணம் முடிந்து
அரசமர பிள்ளையாரைத் தரிசித்தபடி
மாமரம் நின்ற இடத்தில்
இடதுகண் முடியை உருவியபடியே
என்னோடு மகள்…
Trending Now








